சனி, 6 ஜூலை, 2013

சாதியை ஒழிக்க முடியாது: ஒழிக்க வேண்டியது காதல் கலப்பு திருமணத்தை.

சாதியை ஒழிக்க முடியாது: ஒழிக்க வேண்டியது காதல் கலப்பு திருமணத்தை.

தமிழகத்தில் நிகழும் வன்முறை:

தமிழகத்தில் நிகழம் வன்முறைக்கு மூலகாரணம் என்ன என்று ஆராய்ந்தால் விடையா பயமுறுத்துவது சாதி.
உதாரணம்: தர்மபுரி கலவரம்.

அப்படியானால் சாதியை ஒழிக்க வேண்டும்.

சாதி ஒழிப்பு தற்போதைய அணுகுமுறை?

இன்றைக்கு சாதியை ஒழிக்க போராடும் முற்போக்குவாதிகள்,திராவிடர்கள் (கருணாநிதி,கம்யூனிஸ்ட்,திருமா,வீரமணி,)எடுத்திருக்கும் கருவி,ஆயுதம் காதல் கலப்பு திருமணம்.
இந்த காதல் கலப்பு திருமணத்தின்  மூலம் சாதி ஒழிகிறதோ இல்லையொ சாதிகளுக்கிடையில் வன்முறை மட்டுமே வளருகிறது. தற்பபோதைய தர்மபுரி கலவரம் உட்பட.

காதல் கலப்பு திருமணத்தின் எதிரிகள்:

  1. கல்வி அறிவிண்மை.
  2. பொருளாதார ஏற்றத்தாழ்வு (அந்தஸ்து).
  3. பெற்றோர் சம்மதம்.
இந்த மூன்றில் ஏதாவது ஒன்று இல்லாவிட்டால் கூட அந்த  காதல் கலப்பு திருமணம் 1.விவாகரத்து அல்லது 2.மரணத்தில் முடிகிறது.
இந்த மூன்றுமே இல்லாமல் நடந்த காதல் கலப்பு திருமணம் தாண் தர்மபுரி இளவரசன்-திவ்யா திருமணம்.
  1. ஆம் இளவரசனுக்கு வெரும் 19 வயது நிரம்பிய கல்லூரி படிப்பு கூட முடிக்காதவர்.
  2.  தினசரி செலவுக்கு தனது பெற்றவர்களையே நம்பியிருப்பவர்.
  3. பெண்ணின் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் ஓடிப்போய் திருமணம் செய்தவர்கள்.
பிறகு எப்படி அந்த திருமணம் நிலைக்கும்?

முற்போக்குவாதிகளிடம் சில கேள்விகள்:

  1. அடுத்த சாதி பெண் வயிற்றில் மாற்று சாதி ஆணின் கரு வளர்ந்தால் சாதி அழியுமா?ஒழியுமா?
  2. அப்படி வளரும் கரு பிறந்தபின் எந்த சாதியில் சேர்க்கபடுகிறது? (1.தந்தையின் சாதி-பெரும்பாளும் அல்லது 2.தாயின் சாதியில்).
  3. இங்கே எங்கு ஒழிந்தது சாதி?
ஆக இந்த காதல் கலப்பு திருமணத்தால் சாதியை ஒழிக்கவோ,அழிக்கவோ முடியாது.
மாறாக தத்தம் பெற்ற குழந்தைகளுடனும்- பெற்றோர்களுடனும் சிறிய சண்டை,உறவு முறிவு முதல் பெறிய சாதி கலவரம் வரை மூலமாய் இருப்பது காதல் கலப்பு திருமணமே.

ஏன் சாதி ஒழிய வேண்டும்?

  1. சாதியால் பல ஏற்றதாழ்வுகள். 
  2. சாதிகளுக்கிடையில் வன்முறை.
இந்த இரண்டு காரணத்திற்காக மட்டுமே சாதி ஒழிய வேண்டும்,அழிய வேண்டும் என பலர் பல போராட்டம் செய்கிறார்கள்.

 1.சாதியால் பல ஏற்றதாழ்வுகள்:

  1. அந்த காலத்தில் (20 ஆண்டுக்கு முன்) ஒரு சில சாதிக்காரன் மட்டுமே கோயிலுக்குள், ஊரின் சில பகுதிகளில் செல்ல அனுமதி. 
  2. குறிப்பிட்ட தொழிலை குறிப்பிட்ட சாதிக்காரன் மட்டுடே செய்ய வேண்டும்.
  3. சில குறிப்பிட்ட மக்கள் மட்டுமே கல்வி  கற்க அனுமதி.
இக்காலத்தில் மேலேயுள்ள முதல் 2 கருத்துகள் 95%  சதவிகிதம் மாறிவிட்டது.
3வது கருத்து தலைகீழாக மாறிவிட்டது. ஆதாவது 20 ஆண்டுக்கு முன்பு பார்பனர் சாதியினர் மட்டுமே பெற்று வந்த கல்வி இன்று தலித் (SC) கள் மட்டுமே சுலபமாக,இலவசமாக பெற முடிகிறது. மற்ற சாதியினர் அதிக போராடவேண்டியதாக உள்ளது உயர் கல்வியை பெற.

2. சாதிகளுக்கிடையில் வன்முறை. 

இக்காலத்தில் சாதிகளுக்கிடையில் வன்முறை வருவதற்கு முக்கிய மூலகாரணம் என்ன என்று ஆராய்ந்தால் கிடைக்கும் விடை காதல் .
காதல் கலப்பு திருமணம்.
இதை பலர் தங்கள் குடும்பத்தில் நடந்தால் அவமாணமாகவும்,அசிங்கம் எனவும், மரியாதை போய்விட்டது என கருதி தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் தமிழகத்தில் அதிகம்.

இந்த தற்கொலை,கொலைகள் மூலம் வன்முறை வெடிக்கிறது.

ஆக வன்முறைக்கு முதல் காரணம் காதல் கலப்பு திருமணம்.

வன்முறையை அழிக்க,ஒழிக்க இப்போது செய்ய வேண்டியது:
பொருளாதார சமநிலை

1000 ஆண்டுகளுக்கும்  மேலாக இரத்தத்தில் ஊறிப்போன சாதியை வெரும் 20 ஆண்டில் அழிக்கவோ,ஒழிக்கவோ முடியாது.

காதல் கலப்பு திருமணத்தை ஏற்கும் பக்குவம் நம் தமிழக மக்கள் அனைவருக்கும் இன்னும் வரவில்லை.


காதல் கலப்பு திருமணத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தமிழர்களுக்கு வரவேண்டுமானால். ஒரே வழி பொருளாதார சமநிலை.(சம அந்தஸ்து)

இக்காலத்தில்  பொருளாதார சமநிலையில் (பணக்காரர்கள்) உள்ள மகன்/மகள் அதே பொருளாதார சமநிலை.(சம அந்தஸ்து) உள்ள வேறு சாதி
மகன்/மகள் காதல் கலப்பு திருமணத்தில் பெறிதாக பிரச்சனை வருவதில்லை. பிரச்சனைகள் வந்தாலும் அது சாதி வன்முறையாக உருவெடுப்பதில்லை.


பொருளாதார சமநிலை அடைய வழி?: கல்வி

பல நாடுகளில் தம் மக்களுக்கு எதை இலவசமாக தருகிளதோ இல்லையோ கல்வியை இலவசமாக தருகிறது.
ஆனால் நம் தமிழகத்தில் காசு இருந்தால் மட்டுமே நல்ல தரமான கல்வி.
வேண்டுமானால் இலவச சாராயம் தர தயாராயிருக்கும் திராவிட(கருணாநிதி,ஜெயல்லிதா) கட்சிகள்.

பிறகு எப்படி தமிழர்கள் அனைவரும் நல்ல அறிவை வளர்த்துக்கொள்வார்கள்?
அந்த அறிவை பயன்படுத்தி நல்லொழுக்கம்,பணம் சம்பாதித்து பொருளாதர உயர்வு அடைவார்கள்?

கல்வியை இலவசமாக  அனைவருக்கும் தரவேண்டும்.

இதை கேட்டு மருத்துவர்.இராமதாசு பொராடினால் அதையும் கொச்சைபடுத்தும் சில கையாலாகாத சாதி வன்மர்கள்.

ஆக இப்போதைக்கு வன்முறையை கட்டுபடுத்த செய்ய வேண்டியது; பக்குவமில்லாத,பண்படாத தமிழர்களிடத்தில்,தமிழகத்தில் பெற்றோர் சம்மதம் இல்லாத காதல் கலப்பு திருமணத்தை தான் ஒழிக்க வேண்டுமே தவிர சாதியை அல்ல. மீறி செய்தால் வன்முறையை எதிர்கொள்ள தயாராகவேண்டியதுதான்.

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

வன்கொடுமை தடுப்பு சட்டம் (P.C.R Law) மூலம் பழிவாங்கபடுகிறது:சமிபத்திய உண்மை நிகழ்வு

வணக்கம்,

சமிப காலமாக வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக (P.C.R Law) பயன்படுத்தபடுகிறது என்ற கருத்து நிலவுகிறது. இதற்கு சாட்சியாய் அமைந்துள்ளது ஒரு சம்பவம் திருவண்ணாமலை அருகில் உள்ள சின்ன கோளாபாடி என்ற கிராமத்தின் நிகழ்வு.


இந்த கிராமத்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 1 பெண் உட்பட 3 பேர் இச்சட்டத்தின் மூலம் விசாரணையின்றி கைதாகி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த சில குடும்பம் பிற்படுத்தப்பட்ட இனத்தவரின் விவசாய நிலம் அருகே வசித்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்ட இன பெண் விவசாயிகள் நிலத்தில் வேலைசெய்யும் பொது தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த சிலர் குடித்துவிட்டு  வாய்க்கு வந்தபடி தவறான வார்த்தைகளால் திட்டுவது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இந்த நிகழ்வு நாளுக்கு நாள் அதிகமாகி வந்துள்ளது.

 சென்றவாரம் திங்கட்கிழமை (4-2-2013) அன்று  காலை அந்த நிகழ்வு உச்சகட்டத்தை அடைந்தது. அன்று அந்த பிற்படுத்தப்பட்ட இன விவசாயி தகராறு செய்தவர்களை பற்றி  ஊர் பெரியவர்கள் முன்  முறையிட்டார். ஊர் நாட்டாமை,பெரியவர்கள் இருதரப்பினரையும் அழைத்து சுமுக பேச்சுவார்த்தை நடத்தினர் அங்கு அந்த தாழ்த்தப்பட்ட இன நபர் இனிமேல் இதுபோல் நடந்துகொள்ள மாட்டேன் என கூறி தன்வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

அதன் பிறகு  தன் தாழ்த்தப்பட்டோர்  அமைப்புகளை தொடர்புகொண்டு,அந்த அமைப்புகள் உதவியோடு  பிற்படுத்தப்பட்ட இன குடும்பத்தினர் மீது திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினரும் பிற்படுத்தப்பட்ட இன விவசாயியை காவல்நிலையம் வரவழைத்துள்ளனர் . திங்கட்கிழமை (4-2-2013) மாலை விவசாயி தன்குடும்பத்தோடு (விவசாயி, விவசாயின் தந்தை, விவசாயின் மனைவி) காவல்நிலையம் சென்றபோது தகராறு செய்த தாழ்த்தப்பட்ட இன நபர் தாழ்த்தப்பட்டோர்  அமைப்புகளுடன் காவல் நிலையத்தில் இருந்தார்.

அப்போது அந்த அமைப்புகள் காவல் துறையினரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்  (P.C.R Law) FIR பதிவு செய்ய வற்புறுத்தியுள்ளனர். காவல்துறையினர் முதலில் விசாரிக்கலாம் என்று கூறினார். அதற்கு தாழ்த்தப்பட்டோர்  அமைப்பினர் இப்பொழுது PCR சட்டத்தில் வழக்கு (FIR) போடுறிங்கள ,இல்லை உங்கள் (காவல் அதிகாரி) மீதே PCR பாயும் அளவிற்கு இப்பொழுதே காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்துவோம் என மிரட்டி விவசாயின் குடும்பத்தினர் மீது PCR சட்டத்தில் வழக்கு பதிவு செய்துவிட்டனர்.
 கைது ஆனவர்கள் தற்பொழுது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சமிப காலமாக தமிழகத்தில் இதுபோன்ற பழிவாங்கும் செயல் அதிகரித்து வருவதை சுட்டி காட்டும் சம்பத்தில் இதுவும் ஒன்று. ஆகவே புகார் கொடுத்தால் விசாரணையின்றி FIR பதியும் என்ற சில அம்சங்கள் திருத்தப்பட வேண்டும். இதை தற்போழு தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்  (P.C.R Law) திருத்தம் வேண்டும் என்று அரசியல் லாபத்தை கருத்தில் கொள்ளாமல் போராடி வரும் ஒரே தலைவர் மருத்துவர் இராமதாசு மட்டுமே. அவர் போராடுவதை கண்மூடி தனமாக சில பிற்படுத்தப்பட்ட இனத்தவர் எதிர்கின்றனர்.எதிர்பவர்கள் இதுபோன்ற சம்பத்தை மனதில் வைத்து கருத்து கூறவேண்டும்.


கைது செய்யப்பட்ட விவசாயி குடும்பத்தினருக்கு அரசியல் பாகுபாடின்றி பா.ம.க உதவவேண்டும் .