சாதியை ஒழிக்க முடியாது: ஒழிக்க வேண்டியது காதல் கலப்பு திருமணத்தை.
தமிழகத்தில் நிகழும் வன்முறை:
தமிழகத்தில் நிகழம் வன்முறைக்கு மூலகாரணம் என்ன என்று ஆராய்ந்தால் விடையா பயமுறுத்துவது சாதி.
உதாரணம்: தர்மபுரி கலவரம்.
அப்படியானால் சாதியை ஒழிக்க வேண்டும்.
சாதி ஒழிப்பு தற்போதைய அணுகுமுறை?
இன்றைக்கு சாதியை ஒழிக்க போராடும் முற்போக்குவாதிகள்,திராவிடர்கள் (கருணாநிதி,கம்யூனிஸ்ட்,திருமா,வீரமணி,)எடுத்திருக்கும் கருவி,ஆயுதம் காதல் கலப்பு திருமணம்.
இந்த காதல் கலப்பு திருமணத்தின் மூலம் சாதி ஒழிகிறதோ இல்லையொ சாதிகளுக்கிடையில் வன்முறை மட்டுமே வளருகிறது. தற்பபோதைய தர்மபுரி கலவரம் உட்பட.
காதல் கலப்பு திருமணத்தின் எதிரிகள்:
- கல்வி அறிவிண்மை.
- பொருளாதார ஏற்றத்தாழ்வு (அந்தஸ்து).
- பெற்றோர் சம்மதம்.
இந்த மூன்றுமே இல்லாமல் நடந்த காதல் கலப்பு திருமணம் தாண் தர்மபுரி இளவரசன்-திவ்யா திருமணம்.
- ஆம் இளவரசனுக்கு வெரும் 19 வயது நிரம்பிய கல்லூரி படிப்பு கூட முடிக்காதவர்.
- தினசரி செலவுக்கு தனது பெற்றவர்களையே நம்பியிருப்பவர்.
- பெண்ணின் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் ஓடிப்போய் திருமணம் செய்தவர்கள்.
முற்போக்குவாதிகளிடம் சில கேள்விகள்:
- அடுத்த சாதி பெண் வயிற்றில் மாற்று சாதி ஆணின் கரு வளர்ந்தால் சாதி அழியுமா?ஒழியுமா?
- அப்படி வளரும் கரு பிறந்தபின் எந்த சாதியில் சேர்க்கபடுகிறது? (1.தந்தையின் சாதி-பெரும்பாளும் அல்லது 2.தாயின் சாதியில்).
- இங்கே எங்கு ஒழிந்தது சாதி?
மாறாக தத்தம் பெற்ற குழந்தைகளுடனும்- பெற்றோர்களுடனும் சிறிய சண்டை,உறவு முறிவு முதல் பெறிய சாதி கலவரம் வரை மூலமாய் இருப்பது காதல் கலப்பு திருமணமே.
ஏன் சாதி ஒழிய வேண்டும்?
- சாதியால் பல ஏற்றதாழ்வுகள்.
- சாதிகளுக்கிடையில் வன்முறை.
1.சாதியால் பல ஏற்றதாழ்வுகள்:
- அந்த காலத்தில் (20 ஆண்டுக்கு முன்) ஒரு சில சாதிக்காரன் மட்டுமே கோயிலுக்குள், ஊரின் சில பகுதிகளில் செல்ல அனுமதி.
- குறிப்பிட்ட தொழிலை குறிப்பிட்ட சாதிக்காரன் மட்டுடே செய்ய வேண்டும்.
- சில குறிப்பிட்ட மக்கள் மட்டுமே கல்வி கற்க அனுமதி.
இக்காலத்தில் மேலேயுள்ள முதல் 2 கருத்துகள் 95% சதவிகிதம் மாறிவிட்டது.
3வது கருத்து தலைகீழாக மாறிவிட்டது. ஆதாவது 20 ஆண்டுக்கு முன்பு பார்பனர் சாதியினர் மட்டுமே பெற்று வந்த கல்வி இன்று தலித் (SC) கள் மட்டுமே சுலபமாக,இலவசமாக பெற முடிகிறது. மற்ற சாதியினர் அதிக போராடவேண்டியதாக உள்ளது உயர் கல்வியை பெற.
2. சாதிகளுக்கிடையில் வன்முறை.
இக்காலத்தில் சாதிகளுக்கிடையில் வன்முறை வருவதற்கு முக்கிய மூலகாரணம் என்ன என்று ஆராய்ந்தால் கிடைக்கும் விடை காதல் .
காதல் கலப்பு திருமணம்.
இதை பலர் தங்கள் குடும்பத்தில் நடந்தால் அவமாணமாகவும்,அசிங்கம் எனவும், மரியாதை போய்விட்டது என கருதி தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் தமிழகத்தில் அதிகம்.
இந்த தற்கொலை,கொலைகள் மூலம் வன்முறை வெடிக்கிறது.
ஆக வன்முறைக்கு முதல் காரணம் காதல் கலப்பு திருமணம்.
வன்முறையை அழிக்க,ஒழிக்க இப்போது செய்ய வேண்டியது:
பொருளாதார சமநிலை
1000 ஆண்டுகளுக்கும் மேலாக இரத்தத்தில் ஊறிப்போன சாதியை வெரும் 20 ஆண்டில் அழிக்கவோ,ஒழிக்கவோ முடியாது.
காதல் கலப்பு திருமணத்தை ஏற்கும் பக்குவம் நம் தமிழக மக்கள் அனைவருக்கும் இன்னும் வரவில்லை.
காதல் கலப்பு திருமணத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தமிழர்களுக்கு வரவேண்டுமானால். ஒரே வழி பொருளாதார சமநிலை.(சம அந்தஸ்து)
இக்காலத்தில் பொருளாதார சமநிலையில் (பணக்காரர்கள்) உள்ள மகன்/மகள் அதே பொருளாதார சமநிலை.(சம அந்தஸ்து) உள்ள வேறு சாதி
மகன்/மகள் காதல் கலப்பு திருமணத்தில் பெறிதாக பிரச்சனை வருவதில்லை. பிரச்சனைகள் வந்தாலும் அது சாதி வன்முறையாக உருவெடுப்பதில்லை.
மகன்/மகள் காதல் கலப்பு திருமணத்தில் பெறிதாக பிரச்சனை வருவதில்லை. பிரச்சனைகள் வந்தாலும் அது சாதி வன்முறையாக உருவெடுப்பதில்லை.
பொருளாதார சமநிலை அடைய வழி?: கல்வி
பல நாடுகளில் தம் மக்களுக்கு எதை இலவசமாக தருகிளதோ இல்லையோ கல்வியை இலவசமாக தருகிறது.
ஆனால் நம் தமிழகத்தில் காசு இருந்தால் மட்டுமே நல்ல தரமான கல்வி.
வேண்டுமானால் இலவச சாராயம் தர தயாராயிருக்கும் திராவிட(கருணாநிதி,ஜெயல்லிதா) கட்சிகள்.
பிறகு எப்படி தமிழர்கள் அனைவரும் நல்ல அறிவை வளர்த்துக்கொள்வார்கள்?
அந்த அறிவை பயன்படுத்தி நல்லொழுக்கம்,பணம் சம்பாதித்து பொருளாதர உயர்வு அடைவார்கள்?
கல்வியை இலவசமாக அனைவருக்கும் தரவேண்டும்.
இதை கேட்டு மருத்துவர்.இராமதாசு பொராடினால் அதையும் கொச்சைபடுத்தும் சில கையாலாகாத சாதி வன்மர்கள்.
ஆக இப்போதைக்கு வன்முறையை கட்டுபடுத்த செய்ய வேண்டியது; பக்குவமில்லாத,பண்படாத தமிழர்களிடத்தில்,தமிழகத்தில் பெற்றோர் சம்மதம் இல்லாத காதல் கலப்பு திருமணத்தை தான் ஒழிக்க வேண்டுமே தவிர சாதியை அல்ல. மீறி செய்தால் வன்முறையை எதிர்கொள்ள தயாராகவேண்டியதுதான்.
நீங்கள் கூறியிருக்கும் கருத்து முற்றிலும் தவறானது.. ஒரு சில கருத்துகள் ஒத்துப் போகலாம்.. வன்முறைக்கு காரணமாக இருக்கும் கருத்துகள் ஒரு சில உண்மை என்றாலும், ஒரு மனிதரின் உயிர் பிரிதலால் ஏற்படும் வேகம்.. கலவரத்தை தூண்டும் என்பதும் உண்மை என்றாலும், அருகில் இருக்கும் மனிதர்கள், அச்சம்பவத்திற்கு தொடர்பில்லாத மனிதர்கள்.. இவர்களால் தூண்டப்பட்டே இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கின்றன என்பதுதான் உண்மை..
பதிலளிநீக்குபாசப் பிணைப்பால் பெற்றோர்கள் சில காலங்கள் வருத்தமுற்று, பிறகு சேர்த்து வைத்து, சேர்ந்து வாழும் எத்தனையோ கலப்பு திருமணங்கள் உண்டு.
பொருளாதார சமநிலை என்பது சரியான கருத்துதான். நடுத்தர வர்க்கதினருக்கு முக்கிய பிரச்னையாக இருப்பதே இந்த பொருளாதாரம்.. அக் கருத்தில் எந்த முரண்பாடும் எனக்கில்லை.
காலம் காலமாக அடிமைப்படுத்தி, கீழ்நிலை பணியாளர்கள்,தீண்டத் தகாதவர்கள் என பிரித்து வைத்து அவர்களை முன்னேறச் செய்யாமல் செய்த்தே.. இந்த சாதி பித்துதான்.. !
அத்தகைய இன்னல்களுக்கு ஆளானவர்களை முன்னேற்றவே அரசு சலுகைகளைத் தந்து முன்னேற்றப் பாதைக்கு கொண்டுவர சில சட்டதிட்டங்களை கொண்டுவந்தன. குறிப்பாக நீங்கள் SC என்று குறிப்பிட்டு சொன்னது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எத்தனையோ சலுகைகள் அரசு கொடுத்தாலும் இன்னும் முன்னேற சமூகம் என்ற நிலையிலேயே இன்னும் இச்சமூகம் இருக்கிறது.
எத்தனைனோ இன்னல்களை சந்தித்துக்கொண்டிருந்த ஒரு கீழ்மட்டத்தில் இருந்த சமூகத்திற்கு அரசு கொடுக்கும் சலுகைகளை நீங்கள் தவறாக முன்னுதாரணப்படுத்தியிருப்பது எந்த வகையில் நியாயம்?
இன்னும் எத்தனையோ பிரச்னைகள் இருந்துகொண்டேதான் இருக்கிறது.. வன்முறைக்கு சூழலும் ஒரு காரணம்.. குறிப்பாக அதிக வெப்பமிகு நாட்களில், தண்ணீர் பிரச்னை உட்பட, உணவுப் பொருட்கள் உற்பத்தி வரை அனைத்துமே தட்டுப்பாடாக இருக்கும். சூரியன் மனிதர்களை வறுத்தெடுப்பதால் கொதித்துப் போயிருக்கும் மனிதர்களின் மனதும் பொங்குவது இயல்பே.. !!!
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது அவை இன்னும் தூண்டப்படுகின்றன. எரிகிற கொள்ளியில் எண்ணையை மட்டுமல்ல.. பெட்ரோலை அள்ளி வீசும் கலை அரசியல் வாதிகளுக்கு தெரியும்.. ! பிறகென்ன.. கொழுந்து விட்டு எரிந்துவிட்டது.. பொசுங்கியதென்ன பிரச்னைக்குரியவர்கள்..
மற்றவர்களும், பொங்கியவர்கள் அவர்தம் வேலைகளைப் பார்க்க போய்விடுவார்கள்..!!!!
பாசத்தை மையமாக வைத்து இயங்கும் குடும்பங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்ததில்லை..
எதையும் ஏற்கும் மனப்பக்குவம் இருந்திருந்தால்.. இதுபோன்ற நானோ..நீங்களோ அல்லது மற்றவர்களுக்கோ எழுத வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்.
அரசிடமிருந்து பெறுவது மக்களின் கடமை.. நமக்கு என்ன தேவையோ..அதை நாம்தான் தேடிப் பெற வேண்டும்.. கேட்டுப் பெற வேண்டும்.. அமைதியாக கேட்டுப் பெற முடியும். இதற்கு முன்பே ஒருவர் அதை செய்து காட்டியிருக்கிறார்.. உங்களுக்கும் அது தெரியும்.. அதைவிட்டுவிட்டு, திராவிட கட்சிகள், ஜெயல்லிதா, கருணாநிதி என்று காட்டமாக எழுதுவதால் மட்டும் எதுவுமே நடந்துவிடப் போவதில்லை..!!!
உங்களுடைய எழுத்துக்கள் எனக்குப் பிடித்துள்ளது.. உங்களுடைய கருத்துகள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், ஒரு சில பொதுவான கருத்துகளை மறுப்பதற்கும் இல்லை..
இறுதியாய் இதையும் கூறிவிடுகிறேன்.. சாதியை வேரோடு அழிக்க முடியும்.. அது மனிதனால் படைக்கப்பட்டது.. ஆனால் உடலுணர்வுகளை அப்படி அழிக்க முடியாது.. காதல் உணர்வுகளை மறுக்க முடியாது.. அதற்கு சாதி தெரியாது.. மதம் தெரியாது.. மொழி தெரியாது. அது இயற்கையாக அமைந்தது...மனித உடலில் ஓடும் இரத்த ஓட்டத்தைப் போல.. அதை நிறுத்த நினைத்தால் மனித இனம் அழிந்தே போகும்..!!!!!
suppudu supper super super, na othukkuran neenga solrathu 10000000000% unmai,
நீக்கு