சனி, 28 ஏப்ரல், 2012

கூட்டணி மாறியதை பற்றி பா.ம.க வின் விளக்கம்.



பா.ம.க வின் கொள்கையானது

*ஆட்சியை பிடிப்பது அல்ல. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.  நல்லதை பா.ம.க தான் செய்ய வேண்டும் என்பது அல்ல. 
நல்லதை இப்பொழுது ஆட்சியில் மாறி மாறி வரும் திராவிட (தி.மு.க - அ.தி.மு.க) கட்சிகள் செய்தாலே அதை பா.ம.க வரவேற்கும், ஆதரிக்கும்.

*ஆகையால் கூட்டணியில் இடம்பெற்றால் அந்த கட்சிகளை மக்களுக்கு நல்லது செய்ய சொல்லி பணித்துவிடலாம் என்று எண்ணி கூட்டணியில் சேர்ந்தது  பா.ம.க .
* இலவசம்
1 - கல்வி, 2 - விவசாயம், 3 - மருத்துவம்
இவை மூன்றை தவிர எதையும் இலவசமாக தரக்கூடாது என்பது பா.ம.க வின் முக்கிய கொள்கை.

* ஆனால் இந்த திராவிட கட்சிகள் மாறி மாறி அவசியமான இந்த மூன்றையும் தவிர்த்து தேவையற்ற பொருட்களை இலவசமாக தருகிறது.

*மேலும் முழு மது விலக்கு, புகையிலைக்கு எதிராக பல போராட்டங்களை பா.ம.க நடத்திவருகிறது.

*ஆனால்  இந்த திராவிட கட்சிகள் ஆண்டுக்கு ஆண்டு மதுபான விற்பனையை உயர்த்திகொன்டே செல்கிறது.

இதுபோன்ற பல காரணங்களால் இனி இந்த திராவிட கட்சிகளிடம் மக்களுக்கு நல்லதை செய்ய சொல்லி  வலியுறுத்தி , சுட்டிக்காட்டி எந்த பயனும் இல்லை ,

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் இனி நாமே ஆட்சிக்கு வந்தால் தான் வழி என்று எண்ணி இனி  இந்த திராவிட கட்சிகளுடம் ஒருபோதும் கூட்டணியில்லை என்ற மகத்தான முடிவை எடுத்து ,  பா.ம.க இனிவரும் காலத்தில் தனித்தே போட்டியிடும் , அல்லது திராவிட கட்சியை தவிர்த்து பா.ம.க தலைமையில் கூட்டணி என்ற முடிவுடன் செயல் பட்டு வருகிறது.