செவ்வாய், 18 செப்டம்பர், 2012

வன்னியர்கள் தனி இடஒதுக்கீடு கேட்டு இன்று (Sep-17-2012) தமிழகம் முழுவதும் போராட்டம்.

மருத்துவர் இராமதாசு அவர்களால் 1980 களில் உருவாக்கப்பட்ட வன்னியர் சங்கம், வன்னியர்களுக்காக தனி இடஒதுக்கீடு கேட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறது. 1987 ஆண்டு இதே நாளில் (17 -09 -1987) அந்த போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. அப்பொழுது சுமார் 6 நாள் (ஒருவார) சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் விளைவாகத்தான் தமிழகத்தில் MBC எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 108 சாதிகள் கொண்டு உருவாக்கப்பட்டது. அப்பொழுது வன்னியர்கள் சுமார் 21 பேர் தமிழக காவல் துரையின் துப்பாக்கி குண்டுக்கு இறையாகினர்.

இதன் நினைவாக வன்னியர்கள் இதே நாளில் (17 செப் ) ஆண்டுதோறும் அந்த உயிரியந்த தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்துவர்.





இன்றும் வன்னியர் சங்கத்தின் சார்பாக அந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் 1987 க்கு பிறகு வலுவிழந்து காணப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு (17 -09 -2012) தமிழகம் முழுவதும் சூடு பிடித்து காணப்பட்டது.
இதற்க்கு காரணம் பெரும்பாலான வன்னியர்களின் ஆதரவு பெற்ற பா.ம.க இனிவரும் காலங்களில் தனித்தே போட்டியிடும் என்ற முழக்கமே. இந்த ஆண்டின் போராட்டத்தில் பெண்கள் பலர் பல இடங்களில் கலந்தது கொண்டனர் என்பது வியப்புக்குரியது.



இராமதாசு தொடர்ந்து வன்னியர்களுக்காக 20 % விழுக்காடு தனி இடஒதுக்கீடு கேட்டு பல்வேறு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.
இவர் வன்னியர்களுக்கு மட்டும் அல்ல 100 % விழுக்காடு இடஒதுக்கீடு , பீரமனர்களும் சேர்த்து கேட்டு வருகிறார் என்பது சிந்திக்க கூடியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக