செவ்வாய், 28 அக்டோபர், 2014

ஊழல் அ.தி.மு.க அரசின் அநியாய பால் விலை உயர்வு

தமிழக அரசால் ஆவின் பால் விலை 10ரூபாய் உயர்தி, ஏழை,நடுத்தர மக்களின் வயிற்றில் புளியை கரைக்க வைத்துவிட்டார்கள் ஊழல் அ.தி.மு.க அரசு.

தமிழக பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பயடைய இந்த விலை ஏற்றம் தேவை எனவும், ஏற்கனவே ஆவின் பால் கூட்டுரவு சங்கம் நட்டத்தில் இயங்குகிறது அதை சரி செய்ய இந்த விலை உயர்வு தேவை என ஊழல் அ.தி.மு.க அரசு நியாயப்படுத்துகிறார்கள்:

விலை ஏற்றத்தில் 5ரூபாய் விவசாயிகளுக்கு போக மீதி 5 ரூபாய் எங்கே போகிறது?


இந்த மீதி 5 ரூபாய் ஆவின் நட்டத்தில் இருந்து மீட்கவாம்.
அப்படியானால் ஏற்கனவே லிட்டருக்கு ரூ35 என்ற விலை ஆவினுக்கு லாபம் இல்லையாம்.

ஆக ஆவின் பால் ரூ35 என்ற விலை நட்டத்திலும். அதே லிட்டருக்கு ரூ 35 என்ற விலை தனியாருக்கு லாபகரமான விலையாக இருப்பது எங்கோ ஏதோ தவறு நடைபெறுகிறது என்று அப்படமாக தோன்றுகிறது.

இந்த 10ரு விலை ஏற்றம் விவசாயிளுக்குகாகத்தான் என்றால் 10ருபாயும் விவசாயிகளுக்கே கொடுத்திருக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 8ரூபாயாவது விவசாயிகளுக்கு கொள்முதல் விலையாக தந்திருக்க வேண்டும்.

ஏற்கனவே இருக்கும் விலையில் பலர் ஆளும் ஊழல் ஆட்சியின் ஆதரவுடன் ஊழல் செய்ததன் விளைவு இது. இந்த ஊழல்வாதிகளுக்கு தமிழக மாக்கள் 200 ரூ ஓட்டை விற்றார்கள் படிக்காதவர்கள். படித்தவர்கள் அந்த பெரிய ஊழல்வாதிக்கு இந்த சிரிய ஊழல்வாதி பரவாயில்லை என்று சான்று கொடுத்தான்.

இன்று அனுபவிக்கிறான்.... தமிழகத்தை திராவிடம் ஆட்சி செம செம....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக